மசீச.வின் மூத்தத் தலைவரின் மகளுக்கு ஆபாசப்படங்களை அனுப்பி வைத்த குற்றத்திற்காக கோலாலம்பூர், சிலாங்கூர் சீன வர்த்தக, தொழில் சபையின் முன்னாள் வாரிய இயக்குநர் யோ க்வி செங்கிற்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் வெள்ளி அபராம் விதித்தது.
68 வயதான யோ, அந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் நுரெலினா ஹானிம் அப்துல் ஹலிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சீன வர்த்தக, தொழிலில் சபையில் உயர்ந்த பதவி வகித்தவரான யோ, கடநத் 2021 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதிக்கும் ஜுன் 16 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மசீச முன்னாள் தலைவரின் மகளான 53 வயது வோங் பெய் ஹுவான்க்கிற்கு மானப்பங்கம் விளைவிக்கும் நோக்கில் அந்த ஆபாசப் படங்களை அவரின் புலனத்திற்கு அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தொடக்கத்தில் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து வந்த அந்த வர்த்தக சபைத் தலைவர், இன்று நீதிமன்றத்தில் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


