Feb 8, 2026
Thisaigal NewsYouTube
2027-இல் 20 பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு விரிவடைகிறது தேசிய சேவைத் திட்டம் (PLKN 3.0)
தற்போதைய செய்திகள்

2027-இல் 20 பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு விரிவடைகிறது தேசிய சேவைத் திட்டம் (PLKN 3.0)

Share:

பெக்கான், பிப்ரவரி.08-

மலேசியாவின் தேசிய சேவைப் பயிற்சித் திட்டமான PLKN 3.0 வரும் 2027-ஆம் ஆண்டில் 20 பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு விரிவுபடுத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முன்னோடி முயற்சியாக, சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகமான UPSI-யில் 2026-ஆம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தும் முதல் பல்கலைக்கழகமாகத் திகழும் என்று தேசிய சேவைப் பயிற்சித் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ யாகோப் சமிரான் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் சேரும் புதிய மாணவர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு கட்டாயப் பாடமாக, பாடத் திட்டத்தின் இணைக்கப்படும் என்ற விவரத்தையும் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் விளக்கினார்.

Related News