Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஆண்டுக்கு 5 கோடி வெள்ளி இழப்பீடு கோரி, பினாங்கு அரசுக்கு எதிராக வழக்கு / கெடா மந்திரி பெசார் சனூசி அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆண்டுக்கு 5 கோடி வெள்ளி இழப்பீடு கோரி, பினாங்கு அரசுக்கு எதிராக வழக்கு / கெடா மந்திரி பெசார் சனூசி அறிவிப்பு

பாங்கி, செப்டம்பர் 02-

பினாங்கு மாநில அரசாங்கத்திடமிருந்து சுத்திகரிக்கப்படாத தண்ணீர் கட்டணத்தைக் கோரி, அந்த மாநில அரசுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி நோர் அறிவித்துள்ளார்.

சுத்திகரிக்கப்படாத தண்ணீர் கட்டணத்தை பினாங்கு அரசு செலுத்தாததால் கெடா மாநில அரசுக்கு ஆண்டு 5 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த இழப்பீட்டுத்தொகையை கோருவதற்கு இவ்விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசுக்கு தலைமையேற்றுள்ள சனூசி இதனை தெரிவித்துள்ளார்.

பினாங்கு மாநில அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கெடா அரசு உத்தேசிக்கவில்லை. ஆனால், இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்படி பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே பினாங்கு அரசை, நீதிமன்றத்தில் சந்திப்பதென கெடா மாநில அரசு முடிவு செய்துள்ளதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →