புத்ராஜெயா, செப்டம்பர்.09-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 170 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால், அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படமாட்டாது என்று அர்த்தமில்லை என எம்ஏசிசி தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எதிர்த்து சப்ரி வழக்குத் தொடரவில்லை என்பதால் அத்தொகை அரசாங்க நிதியில் சேர்க்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வழக்கில் சப்ரிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பது குறித்து, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.








