Jul 1, 2026
Thisaigal NewsYouTube
தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!
தற்போதைய செய்திகள்

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

Share:

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.22-

முறையாக அங்கீகரிக்கப்படாத தகவல் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தியதோடு, தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவைகளில் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இருவர் இன்று தனித்தனி செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டனர். 43 வயதான சூங் ஃபோர் செங், 46 வயதான லிங் சியூ லுங் ஆகிய இருவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர். மேலும் இவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அதிகப்படியாக 300 ஆயிரம் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

முத்தியாரா டாமான்சாராவில் அங்கீகரிக்கப்படாத GSM Module கருவியைப் பயன்படுத்தி Maxis நிறுவனத்தின் தொலைத் தொடர்புச் சேவைகளைச் சீர்குலைத்ததாக சூங் குற்றம் சாட்டப்பட்டார். அதே சமயம் அதே குற்றத்தைச் செய்ய அவருக்கு உடந்தையாக இருந்ததாக லிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருவருக்கும் தலா 5,000 ரிங்கிட் பிணைத்தொகை விதிக்கப்பட்டதுடன், இந்த வழக்குகளின் அடுத்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை