Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டிற்குள் 150 சுகாதார மையங்களில் ஏஐ நுரையீரல் பரிசோதனை முறை அறிமுகம்
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டிற்குள் 150 சுகாதார மையங்களில் ஏஐ நுரையீரல் பரிசோதனை முறை அறிமுகம்

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.06-

அடுத்த ஆண்டு முதல் குறைந்தது 150 சுகாதார மையங்களில், ஏஐ மூலம் நுரையீரல் பரிசோதனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் புற்றுநோய் மட்டுமல்லாமல், துபோர்குலோசிஸ், ஆஸ்துமா மற்றும் கடுமையான நுரையீரல் அடைப்பு நோய் உள்ளிட்டவைகளை ஏஐ பரிசோதனை மூலம் உடனடியாகக் கண்டறிந்துவிட முடியும் என்றும் சுல்கிஃப்லி அஹ்மாட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் நாடெங்கிலும் சுமார் 7 சுகாதார மையங்களில் ஏஐ நுரையீரல் பரிசோதனை முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதையடுத்து தற்போது அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Related News