Oct 12, 2026
Thisaigal NewsYouTube

சட்டவிரோதச் சூதாட்டத்தை நடத்தி வந்த கும்பல் முறியடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சட்டவிரோதச் சூதாட்டத்தை நடத்தி வந்த கும்பல் முறியடிப்பு

ஈப்போ, ஏப்ரல்.28-

ஈப்போ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சட்டவிரோத லாட்டரி சீட்டு சூதாட்டத்தை நடத்தி வந்த கும்பல் ஒன்றை பேரா போலீசார் வெற்றிகரமாக முடியடித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரா மாநில குற்றப்புலாய்வுத்துறையான D7 , பல்வேறு இடங்களில் நடத்திய சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத லாட்டரி சீட்டு சூதாட்டக் கும்பல் முறியடிக்கப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

இந்தச் சோதனையில் 50 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆண்களையும், ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

சட்டவிரோத லாட்டரி சூதாட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் ரிங்கிட் வரை இந்தக் கும்பல் பணம் ஈட்டி வந்தாக நம்பப்படுகிறது.

இக்கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் ரொக்கப்பணம், கணினிகள், கல்குலேட்டர்கள் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →