Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட செல்ல வேண்டும் அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட செல்ல வேண்டும் அன்வார் வலியுறுத்து

Share:

திட்டமிடப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை விரைவாக செயல்படுத்த அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

தற்போதைய சமூக-பொருளாதார மாற்றங்கள் மற்றும் சவால்களைத் தொடர்ந்து, மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் அக்கறையை 12 எம்.பி. எனப்படும் 12 ஆவது இடைக்கால மதிப்பாய்வு காட்ட வேண்டும் என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இதில் அனைத்து அமைச்சுகளின் உள்ளீடுகளும் பரிசீலிக்கப்படுவதோடு, அனைத்து அமைச்சுகளும் கொள்கை அமலாக்க சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, குறிப்பாக தற்போதுள்ள சட்டத்தின்படி மக்களை ஈடுபடுத்துவதில் அதிக முனைப்புடனும் தீவிரமாகவும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News