Sep 27, 2026
Thisaigal NewsYouTube
மானிய டீசல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: சிலாங்கூரில் இரண்டு லாரிகள் பறிமுதல்; இருவர் கைது
தற்போதைய செய்திகள்

மானிய டீசல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: சிலாங்கூரில் இரண்டு லாரிகள் பறிமுதல்; இருவர் கைது

Share:

சிலாங்கூரில் மானிய சலுகைக்குரிய டீசலை முறைகேடாகக் கடத்த முயன்ற கும்பலை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கப் பிரிவு முறியடித்துள்ளது.

நேற்று ஏப்ரல் 20 ஆம் தேதி அதிகாலை 1.00 மணியளவில், போலீஸ் படையுடன் இணைந்து நடத்தப்பட்ட 'ஓப்ஸ் திரிஸ் 4.0' நடவடிக்கையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாஙகூர் மாநில அமலாக்கப்பிரிவு தலைமை அதிகாரி முகமட் ஹனிசாம் கெச்செக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய இரண்டு லாரிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அந்த லாரிகளில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 கொள்கலன்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் சட்டவிரோதமாகச் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 2,300 லிட்டர் டீசல் மற்றும் லாரிகள் என மொத்தம் 60,000 வெள்ளி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக லாரி ஓட்டுநர்களான இரண்டு மலேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறையான ஆவணங்களின்றி மானிய டீசலை வைத்திருந்ததற்காக, 1961-ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 லட்சம் வெள்ளி வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் முகமட் ஹனிஸாம் கெச்சேக் எச்சரித்துள்ளார்.

Related News