Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மேலும் ஒருவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மேலும் ஒருவர் உயிரிழந்தார்

Share:

நெகிரி செம்பிலான், கெமாஸ் ஷ்யெட் சிராஜுடின் முகாமில் நடைபெற்ற பயிற்சியின் போது வெடிகுண்டு வெடித்ததில், அரச மலேசிய ஆகாயப் படையின் உறுப்பினர் ஒருவர் சம்பவம் இடத்திலேயே மாண்ட வேளையில், மேலும் ஒருவர் கடுங்காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 12 மணியளவில், துப்பாக்கியால் சுடுதல் மற்றும் வெடிக்குண்டுகளை வீசி பயிற்சி பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக பாதுகாப்பு அமைச்சர், டத்தோ செரி மொஹாமாட் ஹசன் கூறினார்.

இதில் சென்டாயான்வான் தள நிர்வாகம் மற்றும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பயிற்சியாளர்களும், ஒரு மாணவரும் சம்பந்தப்பட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News