முன்னாள் நிதியமைச்சரான காலஞ்சென்ற துன் டாயிம் சைனுதீனின் மகன்கள் முகமது அமீர் மற்றும் முகமது அமீன் ஆகிய இருவரையும் கண்டறிய, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM இங்கிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
அமீர் மற்றும் அமீன் ஆகிய சகோதரர்களையும், முன்னாள் வழக்கறிஞர் ஜோசபின் பிரேம்லா சிவநேத்னாவின்-த்தையும் கண்டுபிடிக்கும் நோக்கில், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு சட்ட அமலாக்க அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக SPRM நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த சகோதர்கள் இருவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அனுப்பிய நோட்ஸை பின்பற்றி வாக்குமூலம் அளிக்கத் தவறியதால், அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று நேற்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களுக்கு பிடி வாரண்ட் உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக அவர்களது சகோதரி அஸ்னிடா நேற்று SPRM தலைமையகத்தில் ஆஜராகி ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த நிலையில், அவர்களின் மற்றுமொரு சகோதரரான முகமது வீரா தானியும் விசாரணையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








