May 24, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமையை வலுப்படுத்த விளையாட்டுத் துறை பெரும் பங்காற்றுகிறது
தற்போதைய செய்திகள்

ஒற்றுமையை வலுப்படுத்த விளையாட்டுத் துறை பெரும் பங்காற்றுகிறது

Share:

கோலாலம்பூர் , ஆகஸ்ட் 18

67-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு KLSCCCI ஏற்பாடு செய்திருந்த MERDEKA FOODIE RUN இன்று காலை 7 மணிக்கு தொடங்கி புத்ரஜெயா அஞ்சங் புளோரியா -வில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

2024-ஆம் ஆண்டின் KLSCCCI MERDEKA FOODIE RUN நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இது போன்ற நிகழ்வு நாட்டு மக்களிடையே ஒற்றுமையை மென்மேலும் வலுப்படுத்த பெரும் பங்களிக்கும் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, பல்வேறு இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் அடித்தளமாக விளையாட்டுத் துறை இயங்கிவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு அரசியல் நம்பிக்கைகள், மதங்கள், இனங்கள் என வேறுபட்டிருந்தாலும், மலேசியாவை பிரிதிநிதித்து 2024-ஆம் ஆண்டின் ஒலிம்பிக்கில் பங்கு கொண்டுள்ள மலேசியர்களை ஆதரிப்பதில் மலேசியர்களிடத்தில் வேறுபாடில்லை என்று துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, தெரிவித்தார்.

நாட்டில் ஒற்றுமை உணர்வை தொடர்ந்து செழிக்க ஊக்குவிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட MERDEKA FOODIE RUN நிகழ்ச்சியில் சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Related News