Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நீதிபதிகள் நியமன ஆணையத்தில் நால்வர் நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நீதிபதிகள் நியமன ஆணையத்தில் நால்வர் நியமனம்

புத்ராஜெயா, நவ.18-


நீதிபதிகள் நியமன ஆணையத்தில் நான்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்ட்டுள்ளனர். முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹரூ ணும் அவர்களில் ஒருவர் ஆவார்.

இந்த நால்வரின் பதவிக்காலம் நவம்பர் முதல் தேதி தொடங்கி, இரண்டுகள் அமலில் இருக்கும்.

இட்ருஸ் ஹருணுக்கு அடுத்து கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டான்ஸ்ரீ ஸைனுன் அலி, சரவா முன்னாள் தலைமை நீதிபதி டத்தோஸ்ரீ தலாட் மாமூட் அப்துல் ரஹிட் மற்றும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சட்டத்தறை விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் ஹர்த்தின சரிபான் ஆகியோரே அந்த நான்கு புதிய ஆ ணையர்கள் ஆவர் என்று நீதித்துறையின் நீதிபதிகள் நியமன ஆணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நவம்பர் முதல் தேதி தொடங்கி, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீதிபதிகள் நியமன ஆணையர்களாக இந்த நால்வரும் பதவி வகிப்பர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →