Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சாகீர் நாயிக் சொற்பொழிவாற்றுவதற்கு இனி தடையில்லை - உள்துறை அமைச்சர் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்.20-

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் சாகீர் நாயிக், நாட்டில் சொற்பொழிவு ஆற்றுவதற்கு இனி தடை ஏதுமில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

சாகீர் நாயிக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உள்துறை அமைச்சு மீட்டுக்கொண்டு விட்டதாக இன்று நாடாளுமன்றத்தில் சைபுடீன் குறிப்பிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் சாகீர் நாயிக் நிகழ்த்திய சொற்பொழிவில் வெளியிட்ட இரண்டு அறிக்கைக்காக அவர் சொற்பொழிவு ஆற்றுவதற்கு உள்துறை அமைச்சு தடை விதித்து இருந்ததாக சைபுடீன் விளக்கினார்.

அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் அந்த சமயப் போதகருக்கு உள்துறை அமைச்சு விதித்து இருந்த தடை மீட்டுக்கொள்ளப்பட்டு விட்டது. அவருக்கு எதிரான தடை தற்போது அமலில் இல்லை என்று அமைச்சர் சைபுடீன் விளக்கினார்.

மலேசியாவில் வசிப்பிட அந்தஸ்தை பெற்றுள்ள சாகீர் நாயிக், பொதுவில் சொற்பொழிவாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த வேளையில் பெர்லிஸில் நடைபெற்ற நிகழ்வில் அந்த சர்ச்சைக்குரிய சமயப் போதகர் உரை நிகழ்த்தியதாக அறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாகீர் நாயிக்கிற்கு விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டுவிட்டதா? என்று பக்காத்தான் ஹராப்பான் ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சைபுடீன் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி