May 21, 2026
Thisaigal NewsYouTube
கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்

Share:

ஜோர்ஜ்டவுன், ஜெலுத்தோங் அடுக்குமாடி குடியிருப்பில் உணவு விற்பனையாளரை கொலை செய்ததாக சந்தேகிக்கும் அவரின் மூன்று நெருங்கிய நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

29 வயது முதல் 42 வயது வரை உட்பட்ட இரு ஆணும் ஒரு பெண்ணும் மூன்று நாள் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜோர்ஜ்டவுன், ஓசிபீடி வி. சரவனன் தெரிவித்தார்.

60 வயதுடைய தே டெயிக் சீ- வை கொலை செய்ததாக சந்தேகிக்கும் அவரின் மூன்று நெருங்கிய நண்பர்கள் கொலை நடந்த சில மணி நேரங்களுக்கு பிறகு வெவ்வேறு இடங்களுக்கு செல்லப்பட்டதாகவும் கொலை செய்த காரணம் குறித்து இதுவரையில் தகவல் எதுவும் தெரியவில்லை என்று ஓசிபீடி வி. சரவனன் கூறினார்.

இச்சம்பவம் குறித்து, குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News