ஜோகூர் பாரு, நவம்பர்.01-
ஜோகூர் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜெமாலுவாங் டெய்ரி வெல்லி திட்டத்தின் மூலம் சுமார் மூன்று மில்லியன் லிட்டர்களுக்கும் அதிகமாக பால் உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த JDV திட்டத்திற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 1,000-த்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகளைக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநில விவசாயம், வேளாண்மை சார்ந்த தொழில் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஸஹாரி சாரிப் கூறியுள்ளார்.
தற்போது சினையாக உள்ள கறவை மாடுகளுக்கு, அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் 1,000 கன்றுகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அடுத்த ஆண்டு 3 மில்லியன் லிட்டர்களாக இருக்கும் பால் உற்பத்தி, அடுத்தடுத்த ஆண்டுகளில் 4 முதல் 5 மில்லியனாக உயரும் என்றும் ஸஹாரி சாரிப் தெரிவித்துள்ளார்.








