நாட்டின் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியான கிள்ளான், ஶ்ரீ அன்டால்ஸ், சிம்பாங் லிமாவில் மூன்று புதிய நான்கு மாடி கட்டடங்கள் CCC எனப்படும் நடப்பு கோரிக்கைகளை நிறைவு செய்யும் சான்றிதழின்றி செயல்பட்டு வருவதாக அப்பள்ளியில் பயிலும் பிள்ளைகளின் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
2016 ஆம் ஆண்டில் இக்கட்டடம் Alpha Heritage Sdn Bhd- ஆல் கட்டி முடிக்கப்பட்டதாகவும் CCC எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும் பள்ளி கட்டடம் பயன்படுத்த தொடங்கி 7 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இப்பள்ளியில் ஏறத்தாழ 1200 மாணவர்களும் 130 ஆசிரியர்களும் இருக்கின்றனர். பள்ளி நிர்வாகம், பள்ளி வாரியம், ஒப்பந்ததாரர் மற்றும் Genting Bhd-யின் கல்வி அறவாரியமான The Community Chest (TCC) ஆகியவை சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள சிக்கல்களால் CCC வழங்க தடைசெய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் விளக்கினர்.
கல்வி அமைச்சகம், பள்ளி வாரியத்தின் தலைவர், கிள்ளான் நகராட்சி மன்றம் போன்றவர்கள் விரைவில் இதுக்குறித்து தீர்வு காண உதவ வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








