தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமரும், முன்னாள் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கும்படி அனுதாப அடிப்படையில் மாமன்னர் அப்துல்லாவை கட்சிக் கேட்டுக்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விளக்கம் அளித்துள்ளார்.
நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கியாக வேண்டும் என்ற தோரணையில் மாமன்னரை அம்னோ கேட்டுக்கொள்ளாது. மாறாக அனுதாப அடிப்படையில் அவருக்கு அரச மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மாமன்னரை கேட்டுக்கொள்ளும் என்று அகமட்ஜாஹிட் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் மாதத்தில் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்றுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் சிறைச்சாலையில் நோன்பும் துறக்கும் அம்னோவின் முன்னாள் தலைவர் நஜீப் நிலை குறித்து கட்சி அனுதாபம் கொள்வதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


