Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலை தீயில் அழிந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலை தீயில் அழிந்தது

ரவாங், ஜூன்.30-

பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் அத்தொழிற்சாலை 90 விழுக்காடு அழிந்தது. எனினும் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் ரவாங், ஜாலான் குண்டாங்கில் 22 ஆவது மையில் உள்ள கேர்ஃபிரீ காட்டன் இண்டஸ்ட்ரியல் தொழிற்சாலையில் நிகழ்ந்தது. இது குறித்து காலை 10.14 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு, மீட்புப் படையின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தீயணைப்பு வண்டிகள் சென்றடைவதற்குள் அந்த தொழிற்சாலை கிட்டத்தட்ட முழுமையாகச் சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார். தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் இருக்க தீயை அணைக்கும் பணி காலை 11.25 மணிக்கு நிறைவு அடைந்தது. தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →