புத்ராஜெயா, நவம்பர்.26-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் எம். இராமச்சந்திரன் என்பவரைத் தேடி வருகிறது. 59 வயதுடைய அந்த நபர் 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வருவதாக எஸ்பிஆர்எம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போலி உரிமைக் கோரல்கள் தொடர்பில் செக்ஷன் 18 பிரிவின் கீழ் விசாரணைக்காக அவர் தேடப்பட்டு வருவதாக எஸ்பிஆர்எம் குறிப்பிட்டுள்ளது.
இராமச்சந்திரனின் ஆகக் கடைசியான முகவரி எண்.27, Jalan Raja Nong 9A/KS2, Bunga Raya Residence, Jalan Raja Nong, 4100 கிள்ளான் என்பதாகும். இராமச்சந்திரன் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அல்லது அவரைப் பார்த்தவர்கள் எஸ்பிஆர்எம் விசாரணை அதிகாரி முகமட் சபுவான் அப்துல் கானி என்பவருடன் 017- 2690250 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு எஸ்பிஆர்எம் கேட்டுக் கொண்டுள்ளது.








