Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் உள்ளடக்கப் பதிவேற்றம்: அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால்  குற்றஞ்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் உள்ளடக்கப் பதிவேற்றம்: அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

புக்கிட் மெர்தாஜம், ஆகஸ்ட்.22-

பொதுமக்கள் மத்தியில் பதற்றம் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தன்மையிலான உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்ததாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால் சாலே, பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

டாக்டர் அக்மால், மாஜிஸ்திரேட் நூருல் ரஷிடா முகமட் அகிட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தைத் தமது முகநூலில் அக்மால் பதிவேற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தை சேர்ந்த சோங் வேய் ஹூங் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அக்மால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 505 பிரிவின் கீழ் அக்மால் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து, அக்மால் விசாரணை கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அக்மாலைக் குறைந்த ஜாமீன் தொகையில் விடுவிக்குமாறு அவரின் வழக்கறிஞர் ஐஸாட் அஸாம் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

அக்மாலுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமின் அனுமதிக்குமாறு பிராசிகியூஷன் தரப்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ முகமட் நோர்டின் இஸ்மாயில் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்மாலின் வழக்கறிஞர் ஐஸாட் அஸாம், தனது கட்சிக்காரர் ஒரு தொழில்முனைவர் என்றும், சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார் என்றும் அவர் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பில் இருப்பதால் அவருக்குக் கூடுதல் ஜாமீன் தொகை விதிப்பது என்பது விசாரணைக்கு முன்னதாகவே அவரை தண்டிப்பது போல் ஆகிவிடும் என்று வாதிட்டார்.

எனினும் அக்மாலை 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் நூருல் ரஷிடா அனுமதி அளித்தார்.

முன்னதாக, நீதிமன்றத்திற்கு வெளியே அக்மாலின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஜாலூர் கெமிலாங் கொடிகளை ஏந்திய வண்ணம் அக்மாலுக்கு ஆதரவாக முழுக்கமிட்டுக் கொண்டு இருந்தனர்.

கப்பளா பாத்தாஸில் சீன வணிகர் ஒருவர் ஜாலோர் கெமிலாங் கொடியைத் தலைக்கீழாகக் கட்டினார் என்பதற்காக ஒரு படையுடன் சென்று அந்த வணிகரின் கடையின் முன் நின்று அடாவடித்தனம் புரிந்ததாகக் கூறப்படும் அக்மால், அந்த சம்பவத்தை மையப்படுத்தி தனது முகநூலில் அச்சுறுத்தும் கருத்தைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Related News

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு