Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அன்வாரின் நடவடிக்கைக்கு கைரி ஆதரவு
தற்போதைய செய்திகள்

அன்வாரின் நடவடிக்கைக்கு கைரி ஆதரவு

Share:

சில தினங்களுக்கு முன்பு கிள்ளானில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஓர் இளைஞர், இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்ட சடங்கை வழி நடத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நடவடிக்கையை அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் ஆதரவு தெரிவித்ததுடன் தற்காத்துப் பேசியுள்ளார்.

இந்நடவடிக்கையில் அன்வார் சம்பந்தப்பட்டு இருப்பதை சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் ஆதங்கத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்திய போதிலும் அதில் தவறு ஏதும் இல்லை என்று கைரி தற்காத்துப் பேசினார்.

ஓர் இளைஞரை இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவது ஒரு பிரதமரின் வேலையா? என்று தரப்பினர் எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பில் கைரி எதிர்வினையாற்றினார்.

Related News