May 21, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் மனதை வென்ற மாமணிக்கு விருது வழங்கப்படவுள்ளது
தற்போதைய செய்திகள்

மக்களின் மனதை வென்ற மாமணிக்கு விருது வழங்கப்படவுள்ளது

Share:

ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக பாதுகாப்புக் காவலராக பணிப்புரிந்து வரும் ஆர். யோகேஸ்வரி அவரின் சேவையை பாராட்டி வருகின்ற 19 ஆம் தேதி இஸ்தானா நெகாராவில், மன்னரிடம் பிங்காட் பங்குவான் நெகாரா விருதை பெறவுள்ளார்.

44 வயது, இரண்டு பிள்ளைகளுக்கு தாயான இவர் மருத்துவமனைக்கு வருகின்ற மக்களை எப்பொழுதும் இன்முகத்துடன் வரவேற்பதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை சலிப்பின்றி செய்யும் அவர், பலரின் மனதை கவர்ந்துள்ளார்.

சீரான போக்குவரத்தை உறுதி செய்தல், சக்கர நாற்காலியில் வருபவர்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்தல் போன்ற கருணையும் தன்னலமற்ற தன்மையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் மாநில அளவிலான மகளீர் தின கொண்டாட்டத்தில் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சாரானி முஹமாட்டிடம் " Sejahtera Wanita Award'' என்ற விருதையும் இவர் பெற்றுள்ளார்.

Related News