கோலாலம்பூர், நவம்பர்,08-
தனது நண்பருக்கும், மற்றொரு நபருக்கும் ஏற்பட்ட சண்டையை விலக்கச் சென்ற நபர் ஒருவர், கத்தி வெட்டுக்கு ஆளானார். இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை கோலாலம்பூர், புடு வட்டாரத்தில் நிகழ்ந்தது.
21 வயதுடைய அந்த நபருக்கு தலை, முகம், கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து 16 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு நபர்கள், கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








