ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.04-
ஜோகூர் மாநில போலீஸ் தலைவராக கமிஷனர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான அப்துல் ரஹ்மான், மாநிலத்தில் புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு இருப்பதை மாநில போலீஸ் துறையினர் வரவேற்றுள்ளனர்.
இதற்கு முன்பு அப்துல் ரஹ்மான், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சேவை மற்றும் ஊழியர்கள் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
பதவி உயர்வு பெற்று புக்கிட் அமானுக்கு பணியிட மாற்றாலாகியுள்ள ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேலுக்கு பதிலாக அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
டத்தோ குமார், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் சிஐடி இயக்குநரானப் பதவி உயர்வு பெற்றுள்ளார். குற்றவியல் தடுப்புப் பிரிவில் சவால் மிகுந்த பொறுப்பான சிஐடி இயக்குநர் பதவியை வகிக்கும் முதலாவது இந்தியராக டத்தோ குமார் விளங்குகிறார்.








