புக்கிட் மெர்தாஜாம், அம்பாங் ஜாஜார் என்ற இடத்தில் ஒரு வயது குழந்தை சித்ரவதை செய்யப்பட்டு மரணம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்தக் குழந்தையின் 20 வயது தாயார், அவரின் காதலன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 4.50 மணியளவில் செபராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டட அந்த குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டிருந்த போது , அக்குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த ஆடவர், அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரியவந்துள்ளது. அக்குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்த மருத்துவமனைப் பொறுப்பாளர்கள், பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் அந்த குந்தையின் தாயார், அவரின் 30 வயது காதலன், குழந்தையின் 40 வயது மதிக்கத்தக்க பாட்டி உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையை அடித்தற்கான காயத் தழும்புகள் உடலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


