Oct 16, 2026
Thisaigal NewsYouTube

37 ஆயிரம் பேர் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்குவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
37 ஆயிரம் பேர் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்குவர்

பினாங்கு, நவ. 21-
பினாங்கு மாநிலத்தில் வரும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் 7 பகுதிகளில் உள்ள சுமார் 37 ஆயிரம் பேர் தண்ணீர் விநியோக இடையூறுக்கு ஆளாக நேரிடும் என்று மாநில தண்ணீர் வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கே. பத்மநாபன் அறிவித்துள்ளார்.

பகான் ஜெர்மால், பத்து பிரிங்கி, மவுண்ட்எர்ஸ்கின், தஞ்சோங் பூங்கா, தஞ்சோங் பினாங், தஞ்சோங் தொக்கோங் மற்றும் தெலுக் பஹாங் ஆகிய ஏழு பகுதிகளில் இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை குடிநீர் தடை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பத்து பெரிங்கி நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் 900 எம்.எம். Valve இணைப்பு குழாய் மாற்றுதல் மற்றும் பராமரிப்பு பணி காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு நாள் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று டத்தோ பத்மநாபன் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →