கோலாலம்பூர், செப்டம்பர்.15-
செப்டம்பர் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மலேசிய தினம் கொண்டாடப்படுகிறது. மலேசிய தினம் கொண்டாடப்படும் பட்டர்வொர்த், PICCA@Arena Butterworth அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட 95 விழுக்காடு நிறைவு பெற்றிருப்பத்காக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
அணிவகுப்பு ஒத்திகைகள் நடைபெற்றன. பங்கேற்பாளர்கள் அணிவகுப்புத் தரத்தை மேலும் சிறக்க வைக்க சில ஆலோசனைகளை தாம் நல்கியதாக 2025 ஆம் ஆண்டு தேசிய தினம் மற்றும் மலேசிய தின கொண்டாட்ட செயற்குழுவின் தலைவருமான டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
எனினும் அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்து முடிக்கப்பட்டதாக புக்கிட் மெர்தாஜாமில் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஃபாமி இதனைத் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய தினத்தின் கருப்பொருள், மலேசியா மடானி: ரக்யாட் டிசந்துனி என்பதாகும்.








