Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரைச் சந்திப்பதில் எந்த தலைவரை அன்வார் தடுத்தார்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.20-

தன்னை சந்திப்பதற்கு ஆர்வப்பட்ட வெளிநாட்டுத் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, எந்தெந்த தலைவர்கள் தடுக்கப்பட்டார்கள் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரதமரின் அரசியல் செயலாளர் முகமட் காமீல் அப்துல் முனிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளிநாட்டுத் தலைவர்களை உண்மையிலேயே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தடுத்து இருப்பாரேயானால் துன் மகாதீர், அந்த தலைவர்களின் பெயர்களை அம்பலப்படுத்துவது மூலமே அவரின் குற்றச்சாட்டு வலுப்பெறுமே தவிர வெறுமனே வெளிநாட்டுத் தலைவர்கள் என்று கூறி மழுப்பக்கூடாது என்று முகமட் காமீல் வலியுறுத்தியிருந்தார்.

மலேசியாவிற்கு வந்திருந்த வெளிநாட்டுத் தலைவர்கள் தம்மை சந்திப்பதற்கு ஆர்வப்பட்டதாகவும் ஆனால், தம்மை சந்திக்க வேண்டாம் என்று கூறி, டத்தோஸ்ரீ அன்வார் தடுத்ததாக துன் மகாதீர் நேற்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் மக்களின் அனுதாபத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற மலிவான விளம்பரத்தைத் தேட துன் மகாதீர் முயற்கிக்கிறார் என்று முகமட் காமீல் குறிப்பிட்டு இருந்தார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி