Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கழிப்பறையில் மாணவிக்குப் பகடி வதையா ? விசாரணையில் காவல் துறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கழிப்பறையில் மாணவிக்குப் பகடி வதையா ? விசாரணையில் காவல் துறை

கிள்ளான், ஜூன்.21-

கிள்ளானில் உள்ள ஒர் இடைநிலைப் பள்ளியின் கழிப்பறையில் மாணவிகள் சிலர் சம்பந்தப்பட்ட ஒரு காணொளி குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இன்று நண்பகல் 12.53 மணியளவில் முகநூலில் பரவிய இந்தக் காணொளி குறித்துக் கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக வட கிள்ளான் காவல்துறைத் தலைவர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களிடையே நடக்கும் எந்த விதமான கொடுமைப்படுத்துதலையும் பகடி வதையையும் காவல்துறை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்றும், பொது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தக் காணொளியில் ஒரு மாணவி மற்ற மாணவிகளால் தாக்கப்பட்டு கன்னத்தில் அறையப்படுவது போன்று பதிவாகியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →