Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பாராங்கினால் தாக்குதல் நடத்தியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாராங்கினால் தாக்குதல் நடத்தியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

Share:

பட்டர்வொர்த், மே.28-

ஆடவர் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகும் அளவிற்கு வெட்டுக் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஒரு குத்தகையாளர் உட்பட நால்வர் பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

28 வயது கே. ரவீந்திரன், 32 வயது டி. சத்தியா, 33 வயது முகமட் கலையரசன் அப்துல்லா மற்றும் 53 வயது பி. தனபாலசிங்கம் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு நபர்கள் ஆவர்.

கடந்த மே 16 ஆம் தேதி இரவு 8.35 மணியளவில் பட்டர்வொர்த், ஜாலான் ராஜா ஊடாவில் ஓர் உணவகத்தில் 36 வயது ஓய் ஜிங் வேய் என்பவரை வெட்டுக் கத்தியால் தாக்கியதாக நால்வருக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் ரவீந்திரன், சத்தியா, முகமட் கலையரசன் மற்றும் தனபாலசிங்கம் ஆகியோர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News