பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆற்றிய உரையில் இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்புடைய 3ஆர் விவகாரமாக இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.
மூவார், பக்ரி யில் நிகழ்த்திய உரையில் 3ஆர் தொடர்புடைய அம்சங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்ப்டடுள்ளன. அதன் அடிப்படையிலேயே ஹாடி அவாங்கை விசாரணைக்காக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அழைத்துள்ளதாக முகமது ஷுஹைலி குறிப்பிட்டார்.
தேர்தல் பிரச்சார காலத்தில் உணர்ச்சிகரமான விவகாரங்களை உள்ளடக்கிய 3ஆர் விவகாரத்தை எந்தவொரு தரப்பும் தொடக்கூடாது என்பது அரச மலேசியப் போலீஸ் படையின் உத்தரவாகும். ஆனால், ஹாடி அவாங், குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்கும் பொது மன்னிப்பு வாரியத்தின் செயல்பாடு குறித்து ஹாடி அவாங் கேள்வி எழுப்பியுள்ளார். இது முழுக்க முழுக்க ஆட்சியாளர்கள் தொடர்புடைய விவகாரமாகும். பொது மன்னிப்பு விவகாரத்தை எந்தவொரு தரப்பினரும் கேள்வி எழுப்பக்கூடாது என்ற நிலையிருக்கும் பட்சத்தில் அது குறித்து ஹாடி அவாங் றி பேசியது தொடர்பில் போலீசாரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக முகமது ஷுஹைலி விளக்கினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


