Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்

டிச. 15-

Langkawi Ferry Line Ventures Sdn Bhd நிறுவனம், முன்னதாக அறிவிக்கப்பட்ட Langkawiக்கான Ferry கட்டண உயர்வை இரத்து செய்துள்ளது. அந்நிறுவனத்தின் மேலாளர் Kapten Dr Baharin Baharom கூறுகையில், வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டண உயர்வு மட்டும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.

மலேசியப் போக்குவரத்து அமைச்சு, கெடா மாநில அரசு ஆகியவற்றின் ஆலோசனைப்படி, 2025 ஜனவரி 1 முதல் மலேசியக் குடிமக்களுக்கானக் Ferry கட்டண உயர்வு இரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டுப் பயணிகளுக்கானக் ferry கட்டண உயர்வு அதே தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, Langkawi Ferry Line Ventures இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், Langkawi ferry கட்டணம் 3 ரிங்கிட் முதல் 10 ரிங்கிட் 50 சென் வரை உயர்த்தப்படும் என்று அறிவித்தது. போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இந்த முடிவை கண்டித்தார். அவர், உள்ளூர்வாசிகள், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோருக்கான கட்டணத்தை உயர்த்தும் எந்தவொரு நிறுவனமும் டீசல் மானியத்தைப் பெற தகுதியை இழக்கும் என்று எச்சரித்திருந்தார். அனைத்து நிறுவனங்களும் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, விரைவில் போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →