தொடக்கப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறையில் இருந்த அரசாங்கத் தேர்வுவான யூ.பி.எஸ்.ஆர். ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த தேர்வு முறையை அதேபாணியில் கொண்டு வருவதற்கு சரவா மாநிலம் உறுதி பூண்டுள்ளது.
அரசாங்கத் தேர்வு இல்லாத கல்வி முறையானது, மாணவர்களின் கல்வி அடைவுநிலையை மந்தமாக்கி விடும் என்பதால் மத்திய அரசாங்கம் நடைமுறையைப் படுத்திய யூ.பி.எஸ்.ஆர். தேர்வைப் போலவே அதே பாணியில் சரவா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசாங்கப்பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த சரவா மாநில அரசங்கம் உறுதிப்பூண்டு இருப்பதாக சரவா கல்வி, புத்தாக்கத், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரோலான் சாகா வீ இன் தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி மாணவர்களின் ஆறு ஆண்டு கல்வி அடைவுநிலையை மதிப்பீடு செய்யக்கூடிய முக்கிய தேர்வான யூ.பி.எஸ்.ஆர்., கடந்த 2021 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது துரதிஷ்டமானதாகும் என்று அவர் வர்ணித்துள்ளார்.








