Sep 17, 2026
Thisaigal NewsYouTube
கிளாவ் அணையில் பிரான்ஹா வகை மீன்கள் கூட்டமாக இல்லை
தற்போதைய செய்திகள்

கிளாவ் அணையில் பிரான்ஹா வகை மீன்கள் கூட்டமாக இல்லை

Share:

பகாங் மாநிலம், ரவூப், கிளாவ் அணையில் பிரான்ஹா வகை மீன்கள் கூட்டமாக இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி அங்கு பிடிக்கப்பட்ட ஒரே ஒரு மீன், சிவப்பு வயிற்றுப் பிரான்ஹா மீனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பஹாங் மாநில மீன்வளத்துறை மேற்கொண்ட கள ஆய்வு மற்றும் கண்காணிப்பில், கூடுதலாக எந்த பிரான்ஹா வகை மீனும் பிடிபடவில்லை என்று தெரிவித்துள்ளது.

அதேவேளையில் அந்தப் பகுதியில் இது தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அம்மாநில மீன்வளத்துறை தலைமை இயக்குநர் டத்தோ அட்னான் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஹா வகை மீன்கள் கூர்மையான பற்களைக் கொண்ட இறைச்சி உண்ணும் மீன்கள் என்பதால், மனிதர்களைக் கடித்து காயப்படுத்தும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News