ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.15-
ஐ.எஸ். தீவிரவாதக் கும்பலுக்கு ஆதரவு தெரிவித்து, தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் இரண்டு வங்காளதேசப் பிரஜைகள், ஜோகூர் பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
31 வயது முகமட் மாமுன் மற்றும் 27 வயது முகமட் ரெஃபாட் பிஷாட் என்ற அந்த இரு வங்காளதேசிகள், இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
கடந்த 2023 க்கும் 2024 க்கும் இடைப்பட்ட காலத்தில் தங்களின் முக நூலில் வாயிலாக அந்த தீவிரவாதக் கும்பலுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்ததுடன், அந்தத் தீவிரவாதக் கும்பல் தொடர்புடைய பொருட்களைத் தங்கள் வசம் வைத்திருந்ததாக அந்த இரு வங்காளதேசிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
எனினும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அவ்விருவரும் தெரிவித்தைத் தொடர்ந்து அவர்களிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
வங்காளதேச மொழிப் பெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்கும்படி பிராசிகியூஷன் தரப்பினர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டனர்.








