Oct 18, 2026
Thisaigal NewsYouTube

சுகாதார விழிப்புணர்வு அவசியமாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுகாதார  விழிப்புணர்வு அவசியமாகும்

போர்ட் டிக்சன்,செப்டம்பர் 08-

மலேசியர்களிடையே போதுமான சுகாதார விழிப்புணர்வு இருக்குமானால் அரசாங்க மருத்துவமனைகளில் இட நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் ;தவிர்க்க இயலும் , என்று பிரதமர் டத்தொ ஶ்ரீ அன்வார் இப்ரஹிம் தெரிவித்தார் .

இட நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மலேசிய சுகாதார அமைச்சு பல்வெறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும் எல்லாவற்றுக்குமே நிதி ஒதுக்கீடு வரையறுக்கப்பட்ட நிலை இருப்பதால் உடல் சுகாதாரத்தில் மக்கள் அதிக விழிப்புணர்வை கொண்டு இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இன்று போர்ட் டிக்சனில் சீனி பயன்பாட்டை குறைப்பதற்கான தெசிய அளவிலான 2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் நல்வாழ்வுக்கான பிரசாரத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →