May 22, 2026
Thisaigal NewsYouTube
பெண் தொழிலாளியின் தொடையில் கைவைத்த முதலாளி
தற்போதைய செய்திகள்

பெண் தொழிலாளியின் தொடையில் கைவைத்த முதலாளி

Share:

மலாக்கா, பிப்ரவரி 27 -

தன்னிடம் பணிபுரிந்த பெண்ணின் தொடையில் கைவைத்து, பாலியல் சேட்டை புரிந்ததாக முதலாளி ஒருவர் மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

31 வயது மொஹாமட் ரெட்வான் சப்ரி என்ற அந்த முதலாளி, கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பின்னிரவு 12.30 மணியளவில் மலாக்கா, பாயா டாலாம்,புக்கிட் னீபோங், ஜாலான் பாஜார் என்ற இடத்தில் Isuzu Trooper காரில் 17 வயது பெண்ணிடம் இந்த ஆபாச சேட்டையைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் 2007 ஆம் ஆண்டு சிறார் பாலியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்

Related News