Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பிடிஆர்எம் கே9 மோப்ப நாய்களைத் தத்தெடுக்கும் திட்டம் அறிமுகம்
தற்போதைய செய்திகள்

பிடிஆர்எம் கே9 மோப்ப நாய்களைத் தத்தெடுக்கும் திட்டம் அறிமுகம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.04-

அரச மலேசிய போலீஸ் படையும், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையும் இணைந்து கே9 Adoption Program என்ற திட்டத்தை முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம், K9 பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மோப்ப நாய்களைத் தத்தெடுக்கலாம்.

பிடிஆர்எம்மைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டாலும் கூட, தகுதி வாய்ந்த பொதுமக்களும் இத்திட்டத்தின் மூலம் நாய்களைத் தத்தெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டதின் கீழ், கோரான் என்ற 8 வயது மோப்ப நாயை, அண்மையில் சிஐடி பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் லீ ஷெங் வேய் தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News