Nov 7, 2025
Thisaigal NewsYouTube
ஆடவர் கத்திக் குத்துக் காயத்திற்கு ஆளானார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் கத்திக் குத்துக் காயத்திற்கு ஆளானார்

Share:

பட்டர்வொர்த், நவம்பர்.07-

பட்டர்வொர்த், சுங்கை டூவா, தாமான் டேசா முர்னியில் உள்ள மேடான் செலேரா உணவு விற்பனைத் தளத்தில் நிகழ்ந்த கைகலப்பில் ஆடவர் ஒருவர் கத்திக் குத்துக் காயத்திற்கு ஆளானார்.

மாலை 6.35 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் கத்தியால், இடது மார்புப் பகுதியில் குத்தப்பட்ட 35 வயது நபர், கடும் காயத்திற்கு ஆளானார்.

நண்பர்களால் செபெராங் ஜெயா மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்ட அந்த ஆடவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் போலீசார் இன்னும் எந்தவோர் அறிக்கையும் வெளியிடவில்லை.

Related News