கடந்த ஆகஸ்ட் மாதம் பூச்சோங்கில் உள்ளூரை சேர்ந்த இந்திய மாதுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக தேடப்பட்டு வந்து இந்தியாவைச் சேர்ந்த சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த சாமியார் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி போலீசாரால் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்பரிந்தென்டன் இசுதீன் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாந்தீரீக சடங்கு செய்வதாக கூறி, உள்ளூரை சேர்ந்த 30 வயது மாதுவை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றப் பின்னர் வீடு திரும்பும் போது அந்த மாதுவை காருக்குள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சாமியாருக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு பின்னர் அதிர்ச்சியில் இருந்த அந்த மாது, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த சாமியாருக்கு எதிராக போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக அந்த சாமியாரை போலீசார் தேடி வந்தனர்.
அந்த மாதுவிற்கு சொந்தமான காரில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் சில நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக இசுதீன் அப்துல் வஹாப் குறிப்பிட்டார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


