பகாங், பெலாங்கை சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் தலைவர் டான் ஸ்ரீ கானி சலே தெரிவித்துள்ளார். முன்கூட்டியே வாக்களிப்பு, அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று இன்று புத்ராஜெயாவில் எஸ்பிஆர் கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
பாரிசான் நேஷனலை சேர்ந்த பெலாங்கை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹாருன் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


