பி40 மற்றும் எம்40 தரப்பை சேர்ந்த 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 வெள்ளி மின்-பணம் வழங்கும் திட்டம் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. . பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் அறிவிக்கப்பட்ட உதவிகள் அனைத்தும் மக்களிடம் சென்று அடைவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மின்-பண உதவி ஒரு கோடிக்கும் அதிகமான பெறுநர்களுக்குப் பயனளிக்கும் என்று நிதி அமைச்சு தனது அதிகாரப்பூர்வ முகநூலில் குறிப்பிட்டுள்ளது.
ஒரு லட்சம் வெள்ளி அல்லது அதற்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு இந்த நிதி உதவிக்காக 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் பிரதமர் அறிவித்து இருந்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


