Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கார் விழுந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து  கார் விழுந்தது

கோலாலம்பூர், செப்டம்பர் 08-

செரம்பான் , பெருந்து கட்டடமான தெர்மினல் ஒன்றின் முதலாவது மாடியிலிருந்து ஆடவர் ஒருவர் செலுத்திய HONDA CITY கார் தலைக்குப்புற கீழே விழுந்தது .

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 13.30 மணியளவில் நிகழ்ந்தது .முதலாவது மாடியில் அந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட ஆடவர் காரை செலுத்தும் போது, அது தடுப்பு சுவரை மோதி, சுவருடன் இடிந்து கீழே விழுந்தது. இதில் அந்த கார் ஓட்டுநர் கடுமையான காயங்களுக்கு ஆளாகி, பொதுமக்களால் சிரம்பான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →