Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வாதத்தை மறுத்தார் அம்னோ பொதுச் செயலாளர்
தற்போதைய செய்திகள்

வாதத்தை மறுத்தார் அம்னோ பொதுச் செயலாளர்

Share:

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ விலக வேண்டும் என்று சில டிவிஷன் தலைவர்கள் நெருக்குதல் அளித்ததாக கூறப்படுவதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுகி மறுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற டிவிஷன் தலைவர்களுடான ரகசிய சந்திப்பில் சில அம்னோ டிவிஷன் தலைவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று அஷ்ரஃப் வாஜ்டி விளக்கினார்.

SRC International வழக்கில் அம்னோவின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு முழு மன்னப்பு கிடைக்காதது குறித்து அதிருப்தி கொண்ட சில அம்னோ டிவிஷன் தலைவர்கள், நடப்பு அரசாங்கத்திலிருந்து அம்னோ தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று அகமட் ஜாஹிட்டிற்கு நெருக்குதல் அளித்ததாக கூறப்படுகிறது.

Related News