Oct 17, 2026
Thisaigal NewsYouTube

22 மாடியிலிருந்து கீழே விழுந்து மாது மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
22 மாடியிலிருந்து கீழே விழுந்து மாது மரணம்

கோலாலம்பூர், நவ.9-


கோலாலம்பூர், ஸ்தாபாக்கில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 27 வயது மாது ஒருவர் 22 ஆவது மாடியிலிருந்து கிழே விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் நிகழ்ந்தது. அந்த மாது ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்ட பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஒரு வெளிநாட்டுப்பிரஜையான அந்த மாதுவின் உடல், சவப்பரிசோதனைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதனை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →