தமது மனைவியை சுத்தியலால் அடித்து கொன்றதாக ஆடவர் ஒருவர் டுங்குன், மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அமிர் ஹம்ஸாஹ் என்ற 32 வயதுடைய ஆடவர், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் டுங்குன், பூகிட் பெசி, கம்போங் பெசோல் என்ற இடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சுத்தியலால் தலையிலேயே தாக்கப்பட்ட அந்த ஆடவரின் 41 வயதுடைய மனைவி, ருபியா சப்து rஎன்பவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார்.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அதன் தன்மையைப் புரிந்துக்கொள்வதற்கு அடையாளமாக தலையை அசைத்த அமிர் ஹம்ஸாஹ் விடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை.








