கோலாலம்பூர், செப்டம்பர்.19-
தேசியக் கொடியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் காவல்துறைத் தலைவர் பற்றிய தவறான செய்தியை வெளியிட்டதற்காக, மலேசிய ஊடகங்களான Sin Chew Media Corporation Berhad மற்றும் Sinar Karangkraf Sdn Bhd-க்கு 1 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தலைமை வழக்கறிஞர் மன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில், மலேசியத் தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
மலேசியக் கொடியின் முழுமையற்ற படத்தை அதன் டிஜிட்டல் செய்தித் தளத்தில் வெளியிட்டதற்காக சின் சியூ மீடியாவுக்கும், தலைமைப் பதவிகள் குறித்த கருத்து ஒன்றை தேசியக் காவல்துறைத் தலைவர் கூறியதாக தவறான செய்தியை வெளியிட்டதற்காக Sinar Karangkraf-வுக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.








