கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் பெண் மருத்துவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் இன்று காலை 10.45 மணியளவில் சரவாக், முக்கா, தஞ்ஜோங் மானீஸ், ஜாலான் செர்டாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
டாக்டர் கோரீன் யாங் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த மருத்துவர், எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக தீயணைப்பு மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
தனியொரு நபராக அந்த மருத்துவர், தஞ்சோங் மானிஸிலிருந்து சிபுவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு


