May 21, 2026
Thisaigal NewsYouTube
அரிசிக்குப் பிறகு வெங்காயம் குறித்த சிக்கல்
தற்போதைய செய்திகள்

அரிசிக்குப் பிறகு வெங்காயம் குறித்த சிக்கல்

Share:

அரசாங்கத்தின் சீறிய நடவடிக்கையால் உள்நாட்டு அரிசி குறித்த சிக்கல் கட்டம் கட்டமாய் தீர்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் மறு நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமாட் சாபு தெரிவித்தார்.

உள்நாட்டுத் தேவைக்கு 65 விழுக்காடு அரிசி தற்போது கைவசம் இருக்கின்ற நிலையில், இன்னும் 35 விழுக்காடு பற்றாக்குறையாக உள்ளது என்றார்.

அமிக அண்மையில்தான் MADA நிறுவனம் நெல் அறுவடையை முடித்துள்ளது. அடுத்தக் கட்டப் பணிகள் முடிந்த பின்னரே சந்தையில் அரிசி தயாராக இருக்கும். ஆக, உணவுத் தேவை குறித்த சிக்கல் இருந்து கொண்டேதான் இருக்கும் என முகம்மட் சாபு சொன்னார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியைக் காட்டிலும் உளநாட்டு அரிசியின் விலை குறைவாக இருப்பதால், மக்கள் அதனை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இவ்வாறு, அரிசி, முட்டை, கோழி இறைச்சி ஆகியவை தொடர்புடைய சிக்கல்கள் ஓய்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெங்காயம் குறித்த புதிய சிக்கல் தலையெடுத்துள்ளது, ஆக, முன்னர் கூறியதுபோல், உணவு பற்றாக்குறை சார்ந்த சிக்கல் என்றுமே முடியாத விவகாரம் என முகம்மட் சாபு மேலும் சொன்னார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்